[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு

will-contest-in-chidambaram-lok-sabha-constituency-thirumavalavan

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் காட்பாடி விருதம்பட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டிய தொகுதிகளை தி.மு.கவிடம் கேட்டுள்ளது. நானும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close