[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி கொடூரம்: புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

all-party-meeting-in-tamilnadu-about-lok-sabha-election

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

மக்களவை பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அதிமுக - பாஜக - பாமக, திமுக - காங்கிரஸ் கூட்டணிகள் உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அதிமுகவில் என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவில் கூட்டணி சேர தோழமை கட்சிகளுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close