[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மீண்டும் தமிழகத்தில் 3ஆவது அணி? - என்ன செய்யப் போகிறார் தினகரன்?

will-third-front-form-in-tamilnadu-for-lok-sabha-election-have-ttv-dhinakaran-any-plan-to-form-third-alliance

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக தேர்தல் களம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறது. அதனால் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வர இருப்பதாகவும், அதன் பிறகே தொகுதி பங்கீடு இறுதிபெறும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது. 

அதேபோல, திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு அறிவிப்பும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால், இன்று அல்லது நாளைக்குள் திமுக தனது கூட்டணியை உறுதி செய்யும் என்று தெரிகிறது.

           

திமுக, அதிமுக தங்களது கூட்டணிக்கான பணிகளை கிட்டத்தட்ட முடிக்க உள்ள நிலையில், தினகரன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. குறைந்தபட்சம் எந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்ற தகவலும் இல்லை. இருப்பினும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதான கட்சிகளை தாண்டி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவது என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களாக உள்ள தமிமின் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் தங்களது நிலைப்பட்டை இன்னும் தெரிவிக்கவில்லை.

            

அதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் மற்றும் இந்திய குடியரசுக் கட்சி, ஃபார்வேடு பிளாக் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் 3ஆவது அணி அமையும் வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத கட்சிகள் என்ற அடிப்படையில், சில சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு கமல்ஹாசன் தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

          

அதேபோல், தேமுதிக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்கும் பட்சத்தில் வலுவான மூன்றாம் அணிக்கு சாத்தியம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதைய நிலையில் இரு கட்சிகளிலும் தேமுதிகவிற்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், மூன்றாவது அணி அமைத்தால் அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தேமுதிக கருதலாம். அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதாக தனக்கு வெற்றி வாய்ப்புள்ள வட மாவட்ட தொகுதிகளையும் கேட்டு பெறுவதில் தேமுதிகவிற்கு சிக்கல் உள்ளது. 

            

தினகரன் இதுவரை அமைதியாக உள்ள நிலையில், அவர் என்ன திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. திமுக, அதிமுக கூட்டணியில் இல்லாத சில கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க அவருக்கு வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close