[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி

tn-cm-meet-piyush-goyal-says-the-the-hindu

சென்னையில் பியூஸ் கோயலை தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சந்தித்தாக ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் பாஜக தலைவர்கள் அரசியல் நிமித்தமாக தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். இந்த சூழல் தமிழக்கத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஸ் கோயல் சென்னை வந்தார். சென்னை வந்த பியூஸ் கோயலை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது, விமான நிலையத்திலேயே தமிழக பாஜக தலைவர்களுடன் பியூஸ் கோயல் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். 

Read Also -> விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா விஜயகாந்த்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவானதாக இருக்கும். பிரதமர் மோடியின் கரத்தை அது வலுப்படுத்தும். கூட்டணி குறித்து சரியான நேரத்தில் நல்ல செய்தி வெளியாகும்” என்று கூறினார். 

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்திற்கு கோயல் சென்றார். அங்கு அமைச்சர் தங்கமணியும் சென்றார். இருவரும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர் எனப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. 

Read Also -> 

இந்நிலையில் ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் இந்தச் சந்திப்பு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ‘மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தொழிலதிபர் மக்காலிங்கம் இல்லத்தில் தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சந்தித்தாக கூறியுள்ளது. அத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பியூஸ் கோயல் வரும் முன்னரே பொள்ளாச்சி மகாலிங்கத்தின் இல்லத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் இருவரும் பியூஸ் கோயலுடன் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close