[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாஜக, தேமுதிக,பாமகவுடன் பேச்சுவார்த்தை - அதிமுக எம்.பி வைத்தியலிங்கம்

admk-may-be-alliace-with-bjp-pmk-dmdk-said-by-viathiyalingam

மக்களவைத் தேர்தல்‌ கூட்டணி குறித்து பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 

மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு பாஜகவும் விட்ட இடத்தை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கட்சியோடு கைக்கோர்த்து தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. 

அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடன்தான் கூட்டணி என்று தகவல்கள் பரவி வந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. அதிமுக வட்டாரங்கள் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறி வந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல்‌ கூட்டணி குறித்து பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது எனவும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறினார். 

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அதிமுக தரப்பில் இதுவரை கூறிவந்த நிலையில் தற்போது கட்சிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close