[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ரஃபேல் சிஏஜி அறிக்கை என்ன சொல்கிறது? : சில ஹைலைட் அம்சங்கள்

cag-report-on-rafale-issue-tabled-in-parliament

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்ததைவிட 2.86% குறைவான நிதியை பெற்றிருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரான்சு நாட்டிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக அரசு ஊழல் செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ஊழல் செய்தாக நாடளுமன்றத்தில் புகார் எழுப்பினார். 

இதனையடுத்து இவருக்குப் பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ராகுலின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். அத்துடன் ரஃபேல் போர் விமானம் தொடர்பாக பத்திரிகைகளும் சில தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை 141 பக்கங்களை கொண்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்த எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின. இந்த சிஏஜி அறிக்கை 2007ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் 2016ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு சிலவற்றை கூறியுள்ளது.  

  • 2007ல் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைவிட 2016ல் செய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம் 2.86% குறைவான நிதி அளவை கொண்டுள்ளதாக கூறுகிறது.
  • 2007ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலுள்ள ஒரு ரஃபேல் விமானத்தின் உற்பத்தி விலையே 2016ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் உள்ளதாக தெரிவிக்கிறது.
  • 2007 ஒப்பந்தத்தில் 126 ரஃபேல் விமானங்கள், இந்தியாவிற்கு தகுந்தார்போல் உருவாக்க நிர்ணயிக்கப்பட்ட அகவிலையை விட 2016ன் 36 ரஃபேல் விமானங்களின் விலை 17.08% குறைவாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
  •  2007ல் போட்டப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்திலுள்ள முதல் 18 ரஃபேல் விமானங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை அளவைவிட 2016ல் போட்டப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள அட்டவணை அம்சம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களின் மொத்த விலை என்ன என்பது குறித்த விவரங்கள் இந்த  சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “சத்தியமேவ ஜயதே- உண்மை எப்போதும் நிலைக்கும். சிஏஜி அறிக்கை அதை நிலைநாட்டியுள்ளது. ஏதிர்க்கட்சிகளின் மகா பொய் கூட்டணியை சிஏஜியின் அறிக்கை வெளியே கொண்டுவந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close