[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

“க்ளீன் போல்ட், சிக்ஸர், நோ பால்” - சட்டசபையை கலக்கிய விவாதம்

debate-in-tn-assembly

ஹாட்ரிக் சிக்ஸர், நோபால், க்ளீன் போல்டு என கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் தற்போது தமிழக சட்டப்பேரவையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி முதல் சிக்ஸரை அடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி‌ அறிவித்து இரண்டாவது சிக்ஸரை அடித்திருப்பதாக பேரவையில் அதிமுக உறுப்பினர் செம்மலை பேசியிருந்தார். முதலமைச்சர் விரைவில் ஹாட்ரிக் சிக்ஸர் அடிப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, திமுக தலைவர் ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக ஆட்சி க்ளீன் போல்டு ஆகும் என்று கூறினார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் வீசும் பந்து நோ-பாலாக ஆகிவிடும் என்று தெரிவித்தார்.

மைதானத்திற்கு உள்ளேயே வராமல், ஸ்டாலின் பந்து வீசிக்கொண்டிருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார். மைதானத்திற்கு வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தங்கமணி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close