[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

“எம்எல்ஏவை விலைபேசினார் எடியூரப்பா” - ஆடியோ ஆதாரம் காட்டிய குமாரசாமி 

kumaraswamy-plays-audio-alleges-yeddyurappa-tried-to-bribe-mla

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி தருவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோவை முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ நாகனா கவுடாவின் மகன் ஷாரனாவிடம் கைபேசியில் எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஆடியோவை குமாரசாமி வெளியிட்டார். அந்த ஆடியோவில் ஷாரனாவிடம் 25 லட்சம் ரூபாய் பணமும், அவரது தந்தைக்கு அமைச்சர் பதவியும் தருவதாக எடியூரப்பா கூறியிருப்பதாக தெரிகிறது. 

       

இதுகுறித்து பேசிய குமாரசாமி, நாட்டின் ஜனநாயகத்தை பிரதமர் அழித்து வருவதாகவும் நாட்டு மக்களை தவறாக வழி நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். நரேந்திர மோடி ஒரு பக்கம் நாட்டுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உபதேசம் செய்துவிட்டு மற்றொரு பக்கம் அவரது நண்பர்களை வைத்து கருப்பு பணத்தால் நாட்டின் ஜனநாயகத்தை அழித்து வருகிறார் என்றும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

          

ஆனால், இந்த ஆடியோ போலியானது என எடியூரப்பா மறுத்துள்ளார். முதல்வர் குமாரசாமி தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடியூரப்பா பேசியது போல் மிமிக்ரி செய்து பகுதி நேர சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார் என கர்நாடகா மாநில பாஜக ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

கர்நாடகவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் நாளில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் வரவில்லை. இது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியது. இதனால், ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி கடந்த இரண்டு நாட்களாக பாஜகவினர் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக முதல்வர் குமாரசாமி வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு புகார் கூறியுள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close