[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல ! #PTCampaign

my-vote-not-for-sale-ptcampaign

இன்னும் ஒரு தேர்தல் திருவிழாவிற்கு நாம் அனைவரும் தயாராகி விட்டோம் அல்லவா..? ஆம் இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள், வாக்காளர்கள் தான் என்பார்கள். அப்படிப் பார்த்தால் வாக்களிக்க தகுதி பெற்ற நாம் அனைவருமே இந்திய நாட்டின் எஜமானர்கள் தான். ஆனால் அப்படிப்பட்ட வாக்காளர்களை வைத்துக்கொண்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கக் கூடிய சூழல் நடந்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு உதாரணம் இந்திய அரசியலில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் உண்டு. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நடைபெற்ற சம்பவங்களை நம் கண் முன்னே பார்த்திருக்கிறோம்.

பணம் வாங்கிவிட்டால் நிச்சயம் மறக்காமல் நமக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல்வாதிகள் நம்புகின்றனர். அதற்கேற்ப பணத்தையோ, பொருட்களையோ கொடுக்கின்ற அவர்கள் நம்முடைய நேர்மையை நம்புகின்றனர். அப்படியென்றால் வாக்களிக்கக் கூடிய நாம், நம் நேர்மையை நம்ப வேண்டுமா..? வேண்டாமா..? நம் நேர்மை என்பது எப்படியிருக்க வேண்டும். யாரிடமும் கை நீட்டி வாக்கிற்கு பணம் வாங்க மாட்டேன் என்று இருக்க வேண்டும். நேர்மையான முறையில் வாக்களிப்பதை நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும். 

அந்த வகையில் நாம் அனைவரும் நம்முடையே நேர்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அழுத்தமாக சொல்ல வேண்டிய தருணம் இது. “என்னுடைய மதிப்புமிக்க வாக்கை, உரிமையை வேறு யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று நாம் அனைவரும் சொல்ல வேண்டிய தருணம் இது. சொன்னால் மட்டும் போதாது. சொல்லோடு நின்றுவிடாமல் செயலிலும் நாம் அனைவரும் இணைந்து அதனை செய்து காட்டுவோம்.

உங்களுடைய குரலை ஒட்டுமொத்த உலகத்திற்கும் கொண்டு செல்ல புதிய தலைமுறையும் தயாராக இருக்கிறது. நாம் இத்தனை பேர் தமிழகத்தில் இருந்து வாக்குகளை விற்க தயாராக இல்லை என்கிற குரலை ஒட்டுமொத்த தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் இந்தியாவிற்கும் பரவச் செய்ய வேண்டும். இது ஒரு இயக்கமாக மாற வேண்டும். இது அனைத்தும் மக்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம். அத்தனை பேரும் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொல்வோம். “எங்களுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல. என்னடைய வாக்கு விற்பனைக்கு அல்ல.”

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close