[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ மறுபடியும் தோற்றது” - சித்தராமையா

3-of-4-dissenting-karnataka-mlas-have-claimed-loyalty-to-party-govt-stable-siddaramaiah

பாஜகவின் ஆபரேஷன் தாமரை மீண்டும் தோற்றுவிட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சங்கர், நாகேஷ் என்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், ரமேஷ் ஜர்கிஹோலி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் மற்றும் மகேஷ் குமதஹல்லி ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 4 பேருக்கும் கட்சி தலைமை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

        

இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதாகவும், அவர்களிடம் ரிசார்ட்டில் வைத்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சனிக்கிழமை ஒன்றாக தங்கியிருந்தனர். பாஜக தரப்பில் அவர்களுடன் பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளியானது. பின்னர், இரண்டு எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 4 பேரில் மூவர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஆட்சிக்கு எவ்வித பிரச்னையும் இல்லையென்றும் சித்தராமையா கூறியுள்ளார். கட்சி தலைமை தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு உமேஷ் ஜாதவ் தவிர மற்ற மூன்று பேர் பதில் அளித்துள்ளதாக அவர் கூறினார். 

      

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சித்தராமையா பேசுகையில், “ஊடகங்களில் கூறப்படுவது போன்ற சூழல் இல்லை. 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எம்.எல்.ஏ நாகேந்திராவில் பதில் கடிதத்தை பார்த்தேன். அவர்கள் பாஜக தலைவர்களை பார்க்கவில்லை. மற்ற இருவரின் விளக்கங்களை பார்த்து, பின்னர் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். பாஜகவின் ஆபரேஷன் தாமரை மீண்டும் தோற்றுவிட்டது. பணத்தால் எம்.எல்.ஏக்களை வாங்க முடியாது என்பதை அவர்கள் உணர்வார்கள்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close