[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

“ஆட்சிக்கு இனி நேரு வாரிசுகள் தேவை இல்லை” - தமிழிசை 

tamilisai-soundararajan-comment-about-dmk-stalin-and-poll-survey

மக்களவை கருத்து கணிப்பின்படி ஒன்று இரண்டு இடங்கள் வேண்டுமானால் குறையுமே தவிர, பாரதிய ஜனதாதான் வெற்றி பெறும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வருகை தரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதியதலைமுறைக்கு பேசிய அவர்,  “தமிழகம்,கேரளா,மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். ஒரிசா,மேற்குவங்கத்தில் அதிக இடங்களை பெறுவோம் என கருத்து கணிப்பு சொல்கிறது. இதை வைத்து பார்த்தால் இதற்கு முன் அதிக இடங்கள் கிடைக்காத மாநிலங்களில் அதிக வெற்றி கிடைக்கும் என தெரிய வருகிறது.

Related image

தொங்கும் பாராளுமன்றம் நிச்சயம் வராது. தங்கும் பாராளுமன்றமே அமையும். மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகின்றனர். நாங்கள் ஏற்கனவே 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். உத்திரப் பிரதேசம் பார்த்தால் எங்கள் வாக்குகள் பிரிக்கப்படவில்லை. எதிராளிகள் வாக்குகள்தான் பிரிக்கப்படுகின்றது. பிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாரதிய ஜனதா கட்சிதான் வெற்றி பெறும். பாரதிய ஜனதாவிற்கு எதிராக வாக்களித்த மக்கள் உணர்ந்து வருகின்றனர்”என்றார். 

மேலும், “பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரஸ் வளரவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்களால் இன்னொரு தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு குடும்பத்தின் தலைமுறைதான் தேவை என காங்கிரஸ் சொல்லி கொண்டு இருக்கிறது. புதியதலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் வர வேண்டும் என்பது எங்கள் கருத்து. பிரியங்கா காந்தி தேர்தலுக்கு புதியவர் இல்லை. ஏற்கனவே தேர்தலில் தோற்றவர்தான். நேரு குடும்பத்தின் வாரிசுகள் காங்கிரஸிற்கு தேவை என அவர்கள் முடிவு செய்யலாம். இந்திய ஆட்சிக்கு நேரு வாரிசுகள் இனி தேவை இல்லை.

Image result for பிரியங்கா காந்தி

குறை சொல்வதற்கு என்றே தமிழத்தில் ஒரு தலைவர் உண்டு என்றால் ஸ்டாலின்தான். ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்மறை கருத்துகளை தயார் செய்து வைத்துவிடுகிறார். தாமரை மலரும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கேள்வி கேட்பவர்களுக்கு மீனாட்சியம்மன் பதில் சொல்வார். இந்த மதுரை கூட்டம் எல்லோருக்கும் பதில் சொல்லும். மதுரையில் பல லட்சம் தாமரை மலர உள்ளது. 

பாஜகவிற்கு இவ்வளவு தொண்டர்கள் உள்ளார்கள் என்பதை அனைவரும் பார்க்க உள்ளனர். அப்புறமும் கேள்வி கேட்டால் அவர்களின் உணர்தலில் தவறு உள்ளது என்று அர்த்தம். நவீன நகரம், ஆன்மிக நகரம், சாலை வசதி, விமான சேவை வசதிகள் என பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து தமிழகதிற்கு செய்த திட்டங்களை என்னால் பட்டியலிட முடியும். ஸ்டாலின் 40 லட்சம் செலவு செய்து தனி விமானத்தில் செல்கிறார். சாதாரணமானவர்களும் விமானத்தில் செல்ல மத்தியரசு உதான் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவர்கள் என்ன செய்தார்கள்? எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் தமிழகதிற்கு கொண்டு வரவில்லை என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

Image result for mk stalin

நான் பாரதிய ஜனதா கட்சிக்கு நேரடி வாரிசு கிடையாது. வேறு ஒரு கட்சியின் தலைவருக்கு மகளாக பிறந்து, இன்னொரு கட்சி தலைமை பதவிக்கு வந்துள்ளேன். நீங்கள் மீம்ஸ் போடுகிறீர்கள் என்றால் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. கலைஞர் இருந்திருந்தால் இப்படி செய்தி வந்திருக்காது. பெண்களின் மரியாதையை கலைஞர் காப்பாற்றி இருப்பார். இன்னொரு கட்சியின் பெண் இருப்பதை கலைஞர் மரியாதையாக பார்த்திருப்பார்.

எனது திறமையையும், அவர்களது கட்சி தலைவரின் திறமையை விவாதித்து பார்க்க நான் தயார். கட்சி நிர்வகிப்பது , செய்தியாளர்களை சந்திப்பது, சுயமாக எழுதுவது, சுயமாக பேசுவாது என எந்த விவாதத்திற்கும், போட்டிக்கு நான் தயார். மீம்ஸ் போடுவது என்றால் அவர்களுக்குதான் மீம்ஸ் போட வேண்டும். எந்த பேப்பரையும் பார்த்து நான் பேசவில்லை. மத்தியில் ஆளும் கட்சிக்கு தலைவராக உள்ளேன். முரசொலிக்கு பெண்கள் பதில் சொல்லட்டும்” என்றார் தமிழிசை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close