[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா?: தமிழிசை சவால்

tamilisai-soundararajan-challenge-tn-congress-to-contest-separately-in-local-body-election

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என தமிழ்நாடு ‌காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்திற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், பாரதிய ஜனதாவை விட அக்கட்சியின் வாக்கு விகிதம் குறைந்திருக்கும் எனவும் கருத்து தெரிவித்தார். 4 தொகுதிகளில் அதிமுகவை பாரதிய ஜனதா பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதை இளங்கோவன் உணர வேண்டும் எனவும் கூறியுள்ளார். எனவே, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாரா எனவும் தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close