[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

பிரியங்காவை களமிறக்கும் காங்கிரஸ் - அரசியல் பின்னணி என்ன?

priyanka-gandhi-steps-into-active-politics

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வ பதவி ஏற்கப் போவது இதுவே முதன்முறை. 

பிரியங்காவுக்கு பொதுச் செயலாளர் பதவி

தேசிய அரசியலில் புதிய திருப்பமாக, காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு முதன்முறையாக பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவரை நியமித்து கட்சித் தலைவரும் பிரியங்காவின் சகோதரருமான ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பிரிவு காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா இருப்பார் என்றும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர் பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வ பதவி ஏற்கப் போவது இதுவே முதன்முறை. 

இந்திய அரசியலில் நேரு குடும்பத்திற்கு தனி இடம் உண்டு. சுமார் 150 ஆண்டு அரசியல் பாரம்பரியம் கொண்ட நேரு குடும்பத்தில் 5வது தலைமுறையைச் சேர்ந்த பிரியங்கா காந்தியும் தற்போது அரசியலில் இணைந்துள்ளார். 1972ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிறந்த பிரியங்கா காந்திக்கு தற்போது வயது 47. சகோதரர் ராகுல் காந்தியைவிட 2 வயது இளையவர் பிரியங்கா காந்தி. 

               

தனிப்பட்ட வாழ்க்கை:-

டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஜீசஸ் மேரி கல்லூரியில் உளவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2010ம் ஆண்டில் பௌத்த ஆய்வுகள் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். பௌத்த மதத்திற்கு மாறி அதன் கொள்கைகளை பின்பற்றி வருகிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான பிரியங்கா காந்தி, கடந்த 1997ம் ஆண்டு ராபர்ட் வதேராவை காதலித்து மணந்து கொண்டார். இத்தம்பதிக்கு ரைஹான் என்ற மகனும் மிரியா என்ற மகளும் உள்ளனர். கலைப்பொருட்கள் வர்த்தக தொழிலில் ஈடுபட்டு வந்த குடும்பத்தை சேர்ந்த ராபர்ட் வதேரா பின்னர் ரியல் எஸ்டேட், விருந்தோம்பல், சிறு விமான சேவை உள்ளிட்ட பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது முறைகேடுகளில் தொடர்புள்ளதாக பல்வேறு வழக்குகளும் உள்ளன. 

              

அரசியல் வாழ்க்கை:-

அமேதி தொகுதியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா. காங்கிரஸ் தொண்டர்கள் வற்புறுத்தியபோதிலும் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்த பிரியங்கா தனது தாய் சோனியா காந்திக்காகவும் சகோதரர் ராகுல் காந்திக்காகவும் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் பரப்புரை மேற்கொண்டு வந்தார். 2004 மக்களவை தேர்தல் மற்றும் 2007 உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் அமேதி, ரபேலி தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.

தற்போது காங்கிரஸ் கட்சி முக்கியமான ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டுள்ள நிலையில் நேரடி அரசியலில் அவர் இறங்கியுள்ளார். தனது பாட்டி இந்திராவை போன்றே தோற்றமும் நடை உடை பாவனைகளும் கொண்ட பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

                  

ஒதுங்கி இருந்த பிரியங்கா:-

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவருக்கு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ராகுல் காந்திக்கு இந்தப் பொறுப்புகள் வழங்கும் வரை அவரை காட்டிலும் பிரியங்கா காந்திக்கு அரசியலில் நல்ல வரவேற்பு இருந்தது. விரைவில் அவர் அரசியலில் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்ப்பு அப்போது நிலவி வந்தது. ஆனால், 2017 தேர்தலுக்கு பின்னர் பிரியங்கா காந்தி திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கடந்த ஆண்டில் பெரும்பாலும் அவர் பெயர் அடிபடவே இல்லை. இரண்டு அதிகார மையங்கள் ஒரே நேரத்தில் களமிறக்குவது சரியாக இருக்காது என்று சோனியாகாந்தி நினைத்ததாக அப்போது பேசப்பட்டது.

திடீர் நியமனம் ஏன்?

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து, காங்கிரசை தனித்து விட்டுள்ள நிலையில், அந்த மாநில கிழக்குப் பிரிவு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், உடல்நலக் குறைவு காரணமாக கட்சிப் பணிகளில் இருந்து சோனியா காந்தி ஒதுங்கியுள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

              

2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் இரண்டு இடங்கள் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் கிடைத்தது. 80 இடங்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக 71 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி அடைந்தது. அதேபோல், 2017ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்தக் கூட்டணியும் 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றுவது ஆட்சி அமைப்பதற்கு உதவியாக இருக்கும். அதனால், அங்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சி பிரியங்காவை களமிறக்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close