[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“எதிர்க்கட்சிகளை பார்த்து மோடி அஞ்சுகிறார்” - ஸ்டாலின்

mk-stalin-speech-at-kolkata

நாட்டிலிருந்து மதவாதத்தை விரட்ட 2-வது சுதந்தரப் போராட்டம் தொடங்கியுள்ளதாக கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த இந்தியா என்ற‌ பெயரில் எதிர்க்கட்சிகள் பங்குகொள்ளும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்குத் தலைமை தாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதில் சுமார் 20-க்கும் ‌அதிகமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, நாட்டிலிருந்து மதவாதத்தை விரட்ட 2-வது சுதந்தரப் போராட்டம் தொடங்கியுள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்தியாவின் 2-வது சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன். வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்தலைத்தான் நான் 2-வது சுதந்திரப் போர் எனக் குறிப்பிடுகிறேன். பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2-வது சுதந்திரப் போராட்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும். எதிரிகேள இல்லை எனக் கூறிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை பார்த்து இப்போது பயப்படுகிறார்.

ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்கும், தோல்வி பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிச்சயம் கிடைக்கும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சியமைத்தார் பிரதமர் மோடி. 100 மேடைகளில் 1,000 பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றும் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close