[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக காரைக்குடி எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தேர்வு

karaikudi-mla-k-r-ramasamy-elected-as-congress-leader-in-assembly

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத் தலைவராக கே.ஆர்.ராமசாமியும், கொறடாவாக விஜயதரணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் அக்கட்சியின் தலைமை‌ ‌அலுவலகமான ‌சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய மாநி‌லத் தலைவர் ஈ.வி.கே.‌எஸ். இளங்கோவன், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.‌

தனியார் பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த‌ அவர், பால் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சட்டப்பேரவையில், ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

சட்டப்பே‌‌ரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்‌த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றியை ஈட்டியுள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close