[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பாஜகவில் இருந்து விலகினார் அருணாசல் முன்னாள் முதல்வர் ஜியாங்

former-arunachal-pradesh-chief-minister-gegong-apang-quits-bjp

அருணாசலப் பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் ஜியாங் அபாய் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தலுக்கு முன்பாக அரசியல் ரீதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் சிறிய திருப்பங்கள் கூட முக்கியமானதாக பார்க்கப்படும். ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல்களுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் தொடர்ச்சியாக அரசியல் மாற்றங்களை சந்தித்து வரும் மாநிலம் அருணாசலப் பிரதேசம். வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக அருணாசலப் பிரதேசம் உள்ளது.

       

2015-16 ஆண்டுகளை அடுத்து, தற்போது மீண்டும் அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் திருப்பங்கள் நிகழத் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜியாங் அபாய், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகுவதும் வேறுக் கட்சியில் சேருவதும் அவருக்கு புதிதல்ல.

              

ஜியாங் 1978, 1980, 1984, 1990, 1995, 2000, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் எம்.எல்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முதலாக 1980-ம் ஆண்டு அருணாசலப் பிரதேசம் காங்கிரஸ் கட்சியின்  முதலமைச்சராக பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அதாவது 1999 வரை அவர் முதல்வராக இருந்தார். பின்னர், மீண்டும் 2003-இல் அவர் முதலமைச்சர் ஆனார்.

   

முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களில் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். 2004ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் அருணாசலில் வென்றது. அபாய் மீண்டும் முதலமைச்சர் ஆனார். 2007 வரை முதல்வராக பதவியில் இருந்தார். 2007ல் அவருக்கு எதிராக டோர்ஜி கண்டு தலைமையில் சில எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். பின்னர், டோர்ஜி காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவரானார். 

                     

இதனையடுத்து, 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார். கையோடு பாஜகவில் இணைந்தார். கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த அவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்போது விலகியுள்ளார். 

தற்போதுள்ள பாஜகவானது முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்று அவர் குற்றம்சாட்டி வெளியேறியுள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளார். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு கட்சியாகவே பாஜக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். 2014 சட்டசபை தேர்தலில் அருணாசலப் பிரதேசத்தில் மக்களின் ஆதரவை பாஜக பெறவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close