[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பாஜக சொன்னதை செய்ததா?

science-and-technology-bjp-s-election-manifesto-what-was-said-and-did


கடந்த பதிவில் பாஜகவின் வேலைவாய்ப்பு குறித்த தேர்தல் வாக்குறுதிகளை பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேறியுள்ளன? என்று பார்ப்போம்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த போவதாக கூறியது. அப்படியென்றால் ஆராய்ச்சி துறைக்கு இவர்களின் ஆட்சி காலத்தில் அதிக நிதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்களின் ஆட்சிகால பொருளாதார ஆய்வறிக்கை (2017-18) படி பார்த்தால் ஆராய்ச்சி துறைக்கான அரசின் முதலீடு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவுடன் ஒப்பிடுகையில் உயரவில்லை. அரசின் ஆராய்ச்சிக்கான முதலீடு கடந்த 10 ஆண்டுகளாகவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 0.7 சதவிகிதமாக இருந்து வருகிறது.

பாஜக ஆட்சி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க போவதாக கூறியது. அதற்காக பல திட்டங்களை வகுத்தது. எனினும், பொருளாதார ஆய்வறிக்கை 2017-18இன் படி இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியில் கல்வி நிறுவனங்களின் பங்கு மிகவும் குறைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. 

பாஜக ஆட்சியில் அறிவுசார் சொத்து உரிமைகளுக்கு முன்னுரிமை தரப்படும் என்றனர். மாறாக, ‘சர்வதேச அறிவுசார் சொத்திற்கான பொருளடக்கம் 2017’ (International IP Index 2017) தரவுகளின்படி, உலகநாடுகளின் தரவரிசையில் இந்தியா, 43வது இடத்தில் உள்ளது. மொத்தம் 45 நாடுகளின் தரவரிசையில்தான் இந்தியாவிற்கு இந்த இடம் கிடைத்துள்ளது. இந்தத் தரவரிசையின்படி பார்த்தால் அறிவுசார் சொத்து உரிமைகளுக்கு இந்திய அரசு அதிக கவனம் செலுத்தியதில்லை என்றே தெரிகிறது.

பாஜக அறிவியல் முன்னேற்றத்தின் மூலம் பருவநிலை மாற்றம், பேரிடர் தடுப்பு போன்ற துறையில் சிறப்பாக செயல்பட போவதாக கூறியிருந்தது. ஆனால், சமீபத்தில் நடைபெற்றிருக்கும் கேரளா பேரிடர், தமிழக கஜா புயல் தாக்கம் மற்றும் டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்தல் ஆகியவற்றில் அதிக அளவுக்கு நாடு முன்னேறவில்லை என எதிர்கட்சியினர் இந்த அரசை விமர்சித்து வருகின்றனர்.  ஆகவே அரசின் செயல்பாட்டில் சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறு எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் பாஜக அரசு அறிவியல் துறையில் முக்கியமான திட்டங்கள் சிலவற்றை செய்துள்ளது. அவற்றில் முதன்மையான ஒன்றுதான்  ‘கண்டுபிடிப்புகளை முன்னெடுப்பதற்கான ஆராய்ச்சி திட்டம் (Innovation in Pursuit for Inspired Research)’. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் புதிய அறிவியல் ஆராய்ச்சியை அரசு ஊக்குவித்து வருகிறது. அதேபோல, ‘கிரண்’ (KIRAN) திட்டத்தின் மூலம் பெண்களை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட இந்த அரசு முயற்சித்து வருகிறது.

மேலும் ‘இந்திய கண்டுபிடிப்புக்கான முன்னெடுப்பு’ (India Innovation Initiative) திட்டத்தில் இளைஞர்களை அறிவியல்சார் சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்தி வருகிறது. கடந்த 2017இல் நோபல் பரிசு பெற்ற ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுக்கூட கண்டுபிடிப்பில், இந்தியா சார்பில் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘அடல் இனோவிஷன் மிஷன் (Atal Innovation mission)’திட்டத்தின் மூலம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த கண்டுபிடிப்பு மையங்களை அரசு அமைத்துள்ளது.  

அறிவியல்துறையில் பாஜக ஓரளவு திறம்பட திட்டங்கள் கொண்டுவந்திருந்தாலும் இந்தத் திட்டங்களின் தாக்கம் இன்னும் பயன்பெறும் வகையில் வளரவில்லை என்பதே அறிவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது.    

சரி, சுகாதாரத்துறையில் பாஜகவின் வாக்குறுதிகள் என்ன?

(வெயிட் அண்ட் சி..)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close