[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

“பரீட்சையில் மோடி அரசு ஃபெயில் தானே?” - ப.சிதம்பரம் கேள்வி

it-is-fail-on-modi-government-s-report-card-says-p-chidambaram

ராஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தொங்கு சட்டசபை அமைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளதற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கானா மற்றும் மிசோரத்தில் பிராந்திய கட்சிகள் ஆட்சியை பிடித்தன. 

        

பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறவில்லை. தன்வசம் இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மிகப்பெரிய மாநிலங்களை இழந்துள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பதட்டம் இறுதிவரை இருந்தது. இரு கட்சிகளும் சம அளவில் முன்னிலையில் இருந்து, கடைசியில் வெற்றி காங்கிரஸ் வசம் சென்றது.  

மத்திய பிரதேசம் (மொத்தம் -230 தொகுதி)
காங்கிரஸ் - 114
பாஜக     - 109

    

ராஜஸ்தான் (மொத்தம் 199)
காங்கிரஸ் - 99
பாஜக - 73

       

தேர்தல் வெற்றிகள் குறித்து சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில், “தெலுங்கானா மற்றும் மிசோரமில் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. சத்தீஸ்கரில் தெளிவாக பாஜக தோல்வி அடைந்துள்ளது. ஆனால், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது” என்று கூறியிருந்தார். 

பிரதமரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுந்திய கட்டுரை ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதில், “5 மாநிலங்களில் காங். பெற்றது உறுதியான வெற்றிதான். தொங்கு சட்டசபை என்பது எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலைதான். மூன்று மாநிலங்களில் இரண்டு போட்டியாளர்கள்தான். ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தது. எவ்வித தடையும், சிக்கலும் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இது தொங்கு சட்டசபை அல்ல. 

              

சத்தீஸ்கரில் பாஜக 34 தொகுதிகளை இழந்துள்ளது. 49இல் இருந்து 15 தொகுதிகளாக குறைந்தது. மத்திய பிரதேசத்தில் 56, ராஜஸ்தானில் 90 இடங்களை பாஜக இழந்துள்ளது. மக்கள் தெளிவாக பாஜகவை புறக்கணித்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மோடி அரசு தன்னுடைய ரிப்போர்ட் கார்டில் ஸ்பெயில்தான்” என சிதம்பரம் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close