[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

“பிரதமரை திருடன் என்று கூறுவீர்களா?” மக்களவையில் நிர்மலா சீதாராமன் ஆவேச பேச்சு 

as-far-as-offset-contracts-are-concerned-there-is-no-mention-of-any-private-company-in-iga-sitharaman-in-ls

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தால் மக்களவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. பழைய ஒப்ந்தத்தை மாற்றியது ஏன்? ரஃபேல் விமானத்தின் விலையில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது? அனில் அம்பானி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க கட்டாயப்படுத்தியது யார்? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்விகளை முன்வைத்தார்.

ராகுல் காந்தி பேசுகையில், “ரஃபேல் ஒப்பந்தத்தில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் ? இதற்கு பதில் வரவில்லை. இது பழைய ஒப்பந்தம் என்பதால் புது ஒப்பந்தம் போட்டோம் என்று தெரிவித்தார்கள். ஹிந்துஸ்தான் நிறுவனத்தை நீக்கிவிட்டு அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போட்டார்கள்.

எங்களுடைய முதன்மை கேள்வியே இதுதான் அனில் அம்பானியுடன் ஒப்பந்தம் போட யார் முடிவெடுத்தார்கள் ? பிரதமர் மோடிதான் முடிவெடுத்தார் என்றும் பிரான்சிஸ் முன்னாள் அதிபர் தெரிவித்தார். இதற்கான பதில் உங்களிடமிருந்து வரவில்லை. எனது இரண்டாவது கேள்வி 526 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது, இந்த ஆட்சியில் ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன் ? இந்த கேள்விக்கும் இதுவரை பதில் வரவில்லை” என்று தெரிவித்தார்.

             

ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விமான தயாரிப்பு பணியை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தரவில்லை என காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டினார்.

நிர்மலா சீதாராமன் பேசுகையில், “ரபேல் விமான தயாரிப்பு பணியை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தரவில்லை என காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. அந்நிறுவனத்தை மேம்படுத்த உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்நிறுவனம் வளர வேண்டும் என விரும்பியிருந்தால் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதில் முதலீடுகள் செய்திருக்க வேண்டும். நிபுணர்கள் உதவியுடன் வளர்ச்சிக்கு எதாவது செய்திருக்க வேண்டும். இதில் எதுவுமே நீங்கள் செய்யவில்லை” என்றார்.

             

ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை என கூறினார். ஆவேசமாக பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “பிரதமர் மோடியை திருடன் என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய அன்று நான் அவரை தற்காத்துக்கொள்ள வாதிட்டேன். ஆனால் அன்று நீங்கள் என்னை அமரும்படி தெரிவித்தீர்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்ததால் அது கவனிக்கப்படவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதிகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் ரபேல் விவகாரம் குறித்து தெளிவுபடுத்துங்கள் என்று அவர்கள் கூறும் போதும் மட்டும் என்னையும் உறுப்பினர்களையும் பேச விடுகிறீர்கள். பிரதமரை திருடன் என்று கூறிய போது எங்களை பேச விட்டீர்களா ? திருடன் என்று என்னைப் பார்த்து கத்தினார்கள். அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா ?

பிரதமர் மோடி உட்பட நாங்கள் யாரும் ராஜ குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளோம். எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதையும் எங்கள் மீது ஏரோப்ளேன் பேப்பர் வீசுவதுமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் செயல்களை நிறுத்த வேண்டும். பிரதமரை அனைவரின் முன்னிலையில் கட்டிப்பிடித்து பின்னர் இடத்திற்குச் சென்று கண்ணடிப்பது எங்களுக்கு அவமானம் இல்லையா? அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள்” என்றார்.  

               

தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாகவும் எதிர்பார்த்த பணம் கிடைக்காததுதான் இதற்கு காரணம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினார்.

 

சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகள் படை பலத்தை வேகமாக பெருக்கி வரும் நிலையில் அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவும் செயல்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close