[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

“பிரதமர் வேட்பாளர் ஆகிறார் நிதின் கட்கரி ?” - பாஜகவுக்கு நெருக்கடி அளிக்கும் ஆர்எஸ்எஸ்

will-the-rss-declare-their-next-bjp-pm-candidate-as-nitin-gadkari

நாடாளுமன்ற தேர்தலுக்கான நாட்கள் அரசியல் கட்சிகளால் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான அரசியல் காய் நகர்த்தல்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் தேதிகள் அறிவிக்க இன்னும் நாட்கள் உள்ளதால், பெரும்பாலும் மறைமுகமாகவே இந்த அவை அரங்கேறி வருகிறது. நாட்டின் பிரதான கட்சிகளாக காங்கிரஸ், பாஜக ஒவ்வொரு நாளிலும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்குகிறது. கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளது. 

            

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அரசியல் களத்தில் இருந்த நிலைமையே வேறு. காங்கிரஸ் கட்சி மிகவும் கலக்கத்தில் இருந்த காலம் அது. நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மிகவும் சொற்பமாக 4 மாநிலங்களில் மட்டுமே ஆளும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாஜகவின் முழக்கம் நிறைவேறிவிடும் நிலைக்கு சென்றது எனலாம்.

துணை தலைவராக இருந்த வந்த ராகுல் காந்தி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைவரானார். தலைவரான வேகத்தில் குஜராத் மாநில தேர்தலில் வெற்றியை பரிசளிப்பார் என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எந்த மேஜிக்கும் நடக்கவில்லை. இமாச்சல பிரதேசத்தையும் இழந்ததுதான் மிச்சம். அது ஒருபுறம் என்றால், பல மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றபோது பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ். 

          

கிட்டத்தட்ட பாஜக உச்சத்தில் இருந்த நேரம் அது. அமித்ஷா தொட்டதெல்லாம் வெற்றிதான் என்று பேசப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அபாரமான பிரச்சாரமும், அமித்ஷா அரசியல் வியூகமும்தான் வெற்றிகளுக்கு காரணம் என்று வானளவில் புகழப்பட்டது. பாஜகவில் உள்ள மற்ற தலைவர்களான சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டு, மோடியும், அமித்ஷாவும் மட்டும் முன்னிருத்தப்படுகிறார்கள் என்ற பேச்சு அடிபட்டது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை பாஜகவில் மிதமிஞ்சியே காணப்பட்டது. 

     

இந்நிலையில், 2018ம் ஆண்டில் தான் மிகப்பெரிய மாற்றங்கள் காங்கிரஸ், பாஜகவில் அரங்கேறியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு சிறிய அளவிலான முன்னேற்றமும், பாஜகவுக்கு லேசான சரிவும் ஏற்பட்டது இந்த வருடத்தில்தான். பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்ட் வரி விதிப்பின் தாக்கம் மெல்ல, மெல்ல வெளியே வந்தது எனலாம். குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்த போதும், அதில் இருந்து ஏதோ பாடத்தை காங்கிரஸ் கற்றுக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். கர்நாடக தேர்தலில் பாஜகவை ஆட்சி கட்டிலில் ஏறவிடாமல் செய்து முதல் முத்திரையை ராகுல் பாதித்தார். முதல் முறையாக அமித்ஷாவின் வியூகங்கள் தோல்வியடைந்ததாக கூறப்பட்டது. 

                 

இதனையடுத்துதான், பாஜகவுக்கு மிகப்பெரிய அடியாக 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்து சேர்ந்தது. ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை, பாஜகவுக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். 3 மாநிலங்களில் வெற்றி பெற்ற போது காங்கிரஸ் ஆட்சியை பெரும்பான்மையுடன் பிடிக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் பலத்தால் வெற்றிக் கனியை எட்ட வாய்ப்புள்ளதாகவே இன்று வரை பேசப்படுகிறது. 

           

இத்தகைய நிலையில், பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகளுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருக்கிறது. மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் ராகுலை பிரதமர் ஆக்கிவிடுவது என்றும் அப்படி இல்லையென்றால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை தீர்மானிப்பது என்று முடிவு செய்துள்ளது. பாஜக தங்களுடைய சார்பில் பிரதமர் நரேந்திர மோடிதான் வேட்பாளர் என்று கூறி வருகிறது. 

           

ஆனால், பாஜகவுக்குள் மறைமுகமாக பிரதமர் வேட்பாளர் குறித்து மற்றொரு விவாதமும் நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி மீதும், அமித்ஷா மீதும் அதிருப்தி இருப்பதால் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்ற பேச்சுதான் அது. வெளிப்படையாக இந்த கருத்தினை எந்த தலைவரும் தெரிவிக்கவில்லை. இப்படியொரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, அதனை கட்காரி மறுத்துவிட்டார். தனக்கு அப்படியொரு எண்ணமில்லை, தற்போதைய நிலையே போதும் என்று பதில் அளித்துவிட்டர். 

            

ஆனால், அதோடு அவர் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து அவர் தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. “தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தோல்விக்கு அதேபோல், பொறுப்பேற்க வேண்டும்” என்று வெளிப்படையாக கருத்தை அவர் முன் வைத்தார். அதனால், ஏதோ ஒரு அதிருப்தி அவருக்குள் புகைந்து கொண்டிருப்பதை அதில் இருந்து அறிய முடிகிறது. 

           

நிதின் கட்காரியை முன்னிருத்துவது என்ற முழக்கத்தை முன்னெடுத்தது பாஜகவின் தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்பின் சொந்த ஊரான நாக்பூரைச் சேர்ந்தவர் கட்காரி. தங்களின் கருத்துக்களை மோடியும், அமித்ஷாவும் முன்னெடுத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டினை பாஜக மீது ஆர்.எஸ்.எஸ் வைக்கிறது. 

குறிப்பாக அயோத்தி விவகாரத்தில் பாஜக மீது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் அதிருப்தி உள்ளன. இதனை அவர்களே பலமுறை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறது. ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக நீதிமன்றத்தின் மீது கையை திருப்புகிறது.

            

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோயில் பணிகளை தொடங்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால், பாஜக சார்பில் அப்படி எந்த திட்டமும் இல்லையென்றே சொல்லலாம். பாஜக கூட்டணியில் உள்ள நெருங்கிய கூட்டணி கட்சியான சிவசேனாவும் அயோத்தி விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கிறது. 

அதனால், தங்களுக்கு சார்பான இந்துத்துவா கொள்களை முன்னிறுத்தும் நிதின் கட்காரியை பிரதமர் வேட்பாளராக கொண்டு வர அவை பின் புறத்தில் இருந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு வருகிறது என்றே தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close