[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

100 நாட்களில் 20 மாநிலங்களில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி - பாஜக வகுக்கும் புதிய வியூகங்கள்

pm-narendra-modi-to-touch-20-states-in-party-s-100-day-2019-poll-blitz

2014 மக்களவை தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியை வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக தேர்தலை சந்தித்தது. நரேந்திர நாடு முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரங்களை மேற்கொண்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 

            

மக்களவை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற பெரும்பாலான சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியது. இதனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இடைத்தேர்தல்களில் சற்றே பாஜக சறுக்கினாலும், குஜராத், இமாச்சல் பிரதேசம் தேர்தல் வரை அக்கட்சியின் வெற்றி தொடர்ந்தது. 

              

இந்நிலையில்தான், 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி பாஜக பெரும் நெருக்கடியை அளித்துள்ளது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்று அசத்தியது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

             

ஹிந்தி பேசும் மாநிலங்களில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு புதிய வெற்றிகளை அடைய பல்வேறு வியூகங்களை அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதற்காக, அடுத்து வரும் மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணிகளை அமைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், ‘மிஷன் 123’ என்ற வியூகத்தை பாஜக வகுத்துள்ளது. அதாவது பாஜக போட்டியிட்டு தோல்வி அடைந்த 123 தொகுதிகளில் புத்துயிர் அளித்து வெற்றி பெற வைக்கும் முயற்சிதான் இது. 

            

அதற்காக, அடுத்த 100 நாட்களில் 20 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் மேற்குவங்காளம், அசாம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 77 மக்களவை தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது. இளைஞர்கள், பட்டியல் இனத்தவர், பெண்கள் ஆகியோரின் ஆதரவை திரட்டவும் பாஜக முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதற்காக பாஜகவின் 7 முக்கிய பிரிவுகள் தீவிரமாக பணியாற்றவுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கு ஒவ்வொரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

           

குறிப்பாக, முதல்கட்ட வாக்காளர்களை கவரும் பொருட்டு 14 அம்ச திட்டங்களை மேற்கொள்ளும் பணி பூனம் மகாஜன் தலைமையிலான பாஜகவின் இளைஞர் பிரிவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் ‘Nation with NaMo’ என்ற தன்னார்வ நெட்வொர்க்கை ஜனவரி 12ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நரேந்திர மோடியை மீண்டும் பிரதம்ராக்க தன்னார்வ இளைஞர்களை பணியாற்ற வைப்பதே இதன் இலக்கு. 

            

இதனிடையே, “பிரதமர் மோடிதான் தற்போதும் பிரபலமான தலைவராக இருக்கிறார். நிலையான ஆட்சியைக் கொடுக்கும் திறன் கொண்ட அவர்தான் எங்களது வேட்பாளர். அவரை வைத்தே நாங்கள் களமிறங்குவோம்” என்று பாஜக தேசிய செயலாளர் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close