[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

“ஒரு முதல்வரே இப்படி பேசினால் எப்படி?” - குமாரசாமி பேச்சுக்கு பாஜக கண்டனம்

bjp-demands-apology-from-karnataka-cm-kumaraswamy-over-his-shocking-order

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே சுட்டுக் கொல்லுங்கள் என்று சொல்வதா என்று முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி பிரமுகர் கொலையில் தொடர்புடை‌வர்களை இரக்கமின்றி சுட்டுத்தள்ளுங்கள் என முதலமைச்சர் குமாரசாமி செல்போனில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிவசப்பட்டதால் அதுபோன்ற வார்த்தைகள் வந்துவிட்டதாக குமாரசாமி கூறியுள்ளார். முதலமைச்சர் என்ற ரீதியில் தான் அவ்வாறு பேச‌வில்லை என்றும் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். 

               

மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியப் பிரமுகர் பிரகாஷ் செவ்வாய்க்கிழமை மாலை மைசூரு சாலையில் காரில் சென்றபோது, ஒரு கும்பல் அவரை மறித்து வெட்டிக் கொன்றது. இதனால் மைசூரு, பெங்களூரு சாலை‌யில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். கொலைச் சம்பவம் குறித்து குமாரசாமியிடம் சிறிது நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அவர், பிரகாஷ் மிகவும் நல்லவர் என்றும், அவரைக் கொன்றவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றுவிடுங்கள் என்றும் பேசினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

பின்னர், தான் பேசியது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர் குமாரசாமி, “அது என் உத்தரவு இல்லை. அப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன். இரண்டு கொலையை செய்துவிட்டு சிறையில் இருந்தவர்கள், இரண்டு நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்து மற்றொருவரை கொன்றுள்ளனர். ஜாமினை முறைகேடாக, அவர்கள் இப்படி பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்று யாருக்கும் நடக்கக் கூடாது. கொலைகாரர்கள் சட்டத்தை பயன்படுத்தி சுதந்திரமாக திரிகிறார்கள். ஊடகங்கள் என்னுடைய பேச்சை திரித்து கூற வேண்டாம்” என்றார். 

            

இதற்கிடையில் குமாரசாமியின் பேச்சிற்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ஒரு முதலமைச்சர் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பேசுவதை ஏற்க முடியாது. ஒரு முதல்வரே இப்படி பேசினால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்ன ஆவது?. கர்நாடக மக்களிடம் அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஒரு முதலமைச்சராக அப்படி பேசவில்லை என்று கூறுகிறார். ஆனால், எப்படி ஒருவர் தனித்தனியாக பேச முடியும். பொறுப்பற்ற முறையில் அவர் பேசுவது முதல் முறை அல்ல. அவரது இந்தப் பேச்சு கர்நாடக மாநிலத்தின் மீது தவறான பார்வையை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close