[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும்” - பிரதமர் மோடி

bjp-will-come-to-the-power-in-tamilnadu-modi-speech-with-tamilnadu-bjp-workers

திரிபுரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகளை பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமூட்டியுள்ளார்.

தென்சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மைய பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து கட்சியினருக்கு அறிவுரைகளை அவர் வழங்கினார். சென்னை தியாகராய நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

           

செங்கல்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில் கூடியிருந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடிய மோடியிடம், நாட்டில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவது குறித்து நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தரமான கல்வியை இலவசமாக வழங்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பாடசாலைகளை அதிகளவில் உருவாக்கி, சிறந்த கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

         

கடைசியாக தென்சென்னை நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய மோடி, திரிபுராவில் பாஜகவினரின் கடும் முயற்சியால் நாம் ஆட்சிக்கு வந்ததாகவும், அதே போன்ற வெற்றியை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close