[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

இந்தியாவின் ஒரே ஒரு பெண் முதல்வரானார் மம்தா

as-vasundhara-raje-loses-power-mamata-banerjee-is-now-the-only-woman-chief-minister-in-india

ராஜஸ்தான் தேர்தலில் பாஜக தோற்று முதல்வர் வசுந்தரா ராஜே பதவியிழந்ததை அடுத்து தற்போது இந்தியாவில் ஒரே பெண் முதலமைச்சர் என்ற பெயரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெற்றுள்ளார். 

              

கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, வசுந்தரா ராஜே, மெகபூபா முப்தி, ஆனந்தி பென் பட்டேல், என 5 பெண் முதல்வர்கள் இருந்தனர், இதில் ஜெயலலிதா மரணமடைந்துவிட்ட நிலையில், ஆனந்திபென் பட்டேல் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவிட்டார்.

        

அதனையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் மம்தா பானர்ஜி, வசுந்தரா ராஜே, மெகபூபா ஆகிய மூன்று பெண் முதல்வர் பதவியில் இருந்தனர். வசுந்தரா ராஜே, மெகபூபா ஆகியோர் ஆட்சியை இழந்துவிட்டனர்.  இந்நிலையில் மம்தா பானர்ஜி மட்டுமே பதவியில் எஞ்சியுள்ளார். தேசிய அரசியலில் மம்தா வலுவான நிலையில் உள்ளார். 2011 முதல் மம்தா மேற்கு வங்க முதல்வராக உள்ளார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் மம்தாவுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. 

                

இந்தியாவில் இதுவரை பெண் முதல்வர்களாக 16 பேர் பதவி வகித்துள்ளனர். இதுவரை 13 மாநிலங்களில் பெண் முதல்வர்கள் இருந்துள்ளார்கள். இதில், தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் இரண்டு பெண்கள் முதல்வர்கள் பதவியில் இருந்துள்ளார்கள். 5 பெண் முதல்வர்களை கொடுத்த கட்சியாக காங்கிரசும், 4 பெண் முதல்வர்களை பாஜகவும், 2 பேரை அதிமுகவும் கொடுத்துள்ளன. 

             

நாட்டின் முதல் பெண் முதல்வராக உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சுசேதா கிரிபலானி பதவி வகித்தார். 1963 முதல் 1967 வரை அவர் பதவியில் இருந்தார். டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்ஷித் தான் அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஆவார். அவர் 1998 முதல் 2013 வரை டெல்லி முதல்வராக பதவி வகித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close