[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

“ரஜினி மீண்டு வரவில்லையா? பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை

tamilisai-soundararajan-reply-to-rajini

ரஜினியின் ஒருபடம் ஓடவில்லையென்றாலும், அடுத்த படம் ஓடுவதைபோல பாஜக மீண்டு வரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. அதேபோல தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. மிசோரமில், மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியமைக்கிறது. 5 மாநிலத் தேர்தலில் ஒரு மாநிலங்களில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ரஜினியின் ஒருபடம் ஓடவில்லையென்றாலும், அடுத்த படம் ஓடுவதைபோல பாஜக மீண்டு வரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ரஜினியின் ஒருபடம் ஓடவில்லையென்றால் அவரின் செல்வாக்கு சென்றுவிட்டது என நான் சொல்லமாட்டேன். அடுத்தப்படம் வெற்றியடைகிறது. அரசியலும் அதேபோலதான். இடையில் ரஜினிக்கு சில படம் தோல்வியடைந்தது. மறுபடியும் ரஜினி மீண்டெழுந்து வரவில்லையா..? அதேபோல பிரதமர் மோடிக்கு சின்ன சறுக்கல். மத்தியப் பிரசேதத்தில் சூழ்நிலை சரியில்லை. ஆனால் பாஜக மீண்டு வரும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close