[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

மேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா? - செந்தில்பாலாஜி பதில் 

senthil-balaji-byte-about-releave-ttv-dinakaran-party

முதல் முதலில் மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியதே நான்தான் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தரப்பு தயாரானது. இதில் செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு டிடிவி தரப்பு மறுப்பு தெரிவித்து வந்தது.

இதுகுறித்து பேட்டியளித்த டிடிவி ஆதரவாளர் புகழேந்தி அனைத்து தரப்பினருக்கும் முழு சுதந்திரம் கொடுத்துதான் டிடிவி கட்சியை வழிநடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து இன்று காலை 12 மணியளவில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்தார். அங்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதில் கரூரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி ஸ்டாலினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தேன் என குறிப்பிட்டார்.

அப்போது 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பில் மேல்முறையீடு செய்யாததே பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த செந்தில்பாலாஜி, முதல் முதலில் மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியதே நான்தான் எனவும் மேல்முறையீட்டுக்கு சென்றால் வழக்கு முடியும் வரை ஒபிஎஸ் ஈபிஎஸ் ஆட்சி தொடரும் என்பதால் அதற்கு நாமே துணை  செல்லக் கூடாது என தெரிவித்ததாக குறிப்பிட்டார். தேர்தலை சந்திக்கலாம் எனவும் மக்கள் களத்தில் தீர்ப்பை விட்டு விடலாம் என கூறியது நான் தான் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close