[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

செந்தில் பாலாஜி கடந்து வந்த அரசியல் பயணம்

senthil-balaji-passed-the-political-journey

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜியின் அரசியல் பயணத்தை பார்க்கலாம்.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் இயற்பெயர் செந்தில் குமார். நியூமராலஜிபடி தனது பெயரில் குமாரை நீக்கிவிட்டு பாலாஜியைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர், முதலில் மதிமுகவில் இணைந்தார். ஒன்றியக் கவுன்சிலராக இருந்த செந்தில் பாலாஜி, பின்னர் திமுகவில் சேர்ந்தார். 

2000ஆவது ஆண்டில் அதிமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு தொடக்கத்தில் மாணவர் அணி பொறுப்பும் சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. 

2006ஆம் ஆண்டில் கரூர் எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். 2011ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார். எனினும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தினகரன் அணியினருடன் சேர்ந்து செயல்படத் தொடங்கியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வருக்கு எதிராக செயல்பட்டதாகக்‌கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். 

இதையடுத்து அமமுகவில் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுகவில் இணந்துள்ளார் செந்தில்பாலாஜி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close