[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா?”- புகழேந்தி  

if-senthil-balaji-joins-the-dmk-will-stalin-become-the-chief-minister

துரோகம் செய்தால் செந்தில் பாலாஜி தூக்கில் தொங்கிவிடுவேன் என கூறியுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அமமுக சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் சமீப காலமாக அவர் பங்கேற்கவில்லை. மேலும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி செல்வது போன்ற புகைப்படம் வெளியானது.

இதுகுறித்து ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அது பழைய புகைப்படம் எனவும் செந்தில் பாலாஜி திமுக வருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும் ராசா தெரிவித்தார்.

 இதைத்தொடர்ந்து சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள் என டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “செந்தில் பாலாஜி போய்தான் திமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. செந்தில் பாலாஜி திமுகவில் இணைவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. ஏனென்றால், கொங்குமண்டலத்தில் இருந்து சிலர் சசிகலாவிற்கு துரோகம் செய்திருந்தாலும் நான் துரோகம் செய்யமாட்டேன். அவ்வாறு ஒரு சூழ்நிலை வந்தால் நான் தூக்கில் தொங்கிவிடுவேன் என செந்தில் பாலாஜி கூறினார். எனவே செந்தில் பாலாஜி துரோகமும் செய்யமாட்டார். தூக்கிலும் தொங்க மாட்டார். 

ஊடகங்களில் தன்னைப்பற்றி செய்திகள் வந்தாலும் விளக்கம் கொடுக்க மாட்டார் செந்தில் பாலாஜி. இது அவரது பிரவி குணம். துரோகத்தை எதிர்த்து வெளிவந்து மீண்டும் துரோகம் செய்தால் யாராக இருந்தாலும் காணாமல் போவர்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா? எல்லோருக்கும் சுதந்திரத்தை கொடுத்து அழகு பார்ப்பவராகவே தினகரனை பார்க்கிறேன். செந்தில் பாலாஜியை பெரிய நபராக நாம் ஏன் பேச வேண்டும். தலைமை, சின்னம், தலைவரை பொறுத்துதான் கட்சி வெற்றி பெறும். ஒரு தனி நபரை பொறுத்து அல்ல. திமுகத்தான் எங்களுக்கு எதிரி. இதை அப்போதிலிருந்தே நாங்கள் கூறி வருகிறோம்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close