[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின்

dmk-leader-mk-stalin-meet-sonia-gandhi-today-and-wish-her-birth-day

இன்று பிறந்தநாள் காணும் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து திமுக தலைவர்
ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறார். 

மறைந்த பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி இன்று
தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து
தெரிவித்து வருகின்றனர். 

திமுக தலைவர் ஸ்டாலின் டெல்லி சென்று சோனியா காந்திக்கு நேரில் வாழ்த்து கூறவுள்ளார். இன்று அதிகாலை டெல்லி
புறப்படும்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக முன்னாள் தலைவர்
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியாகாந்திக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும் அழைப்பு
விடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சோனியாகாந்தியோடு ஆலோசனை நடத்தப்படுமெனவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து நாளை டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்க இருப்பதாகக் கூறினார். அப்போது மற்ற
மாநில அரசியல் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறினார். அந்த
கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால், மேகதாது பிரச்னை குறித்து அவரிடமும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close