[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும்”: தீவிரமடையும் தமிழிசை - ஸ்டாலின் கருத்து மோதல்

tamilisai-answer-to-stalin-about-lotus

மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும் என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பாஜக மற்றும் காங்கிரஸ் தங்கள் கூட்டணிகளை மும்முரமாக அமைத்து வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக களம் காணும் எனக் கூறப்படுகிறது. இதனால் பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து நேற்று திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் தண்ணீரே இல்லை. புல் கூட முளைக்காத நிலையில், தாமரை எப்படி மலரும்” என்று விமர்சித்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழிசை, “இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து, தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதில் தெரிவித்த ஸ்டாலின், “சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார். அதில், “அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ்விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு. மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும். சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும், குளத்து நீரில் மிதக்கும் தாமரையை கருகச்செய்யாது, கருகச்செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி”. என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close