[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

வைகோவிற்கு தமிழிசை கண்டனம் 

tamilisai-condemned-to-vaiko

பிரதமர் மோடியை அரசியல் நாகரீகம் இல்லாமல் ஒருமையில் விமர்சிக்கும் வைகோவை தமிழக பாஜக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு எனவும் தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு எனவும் விமர்சித்தார். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியதாகவும் ஆனால் அவர்களை பார்க்க 5 நிமிடம் கூட நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி ஒரு சாபக்கேடு என விமர்சித்தார்.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மோடி கஜா புயல் பாதிப்பை பார்க்க வரவில்லை எனவும் விதவிதமாக டிரஸ் போடுவது, தினம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடிக்கு உள்ளன எனவும் சாடினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை அரசியல் நாகரீகம் இல்லாமல் ஒருமையில் விமர்சிக்கும் வைகோவை தமிழக பாஜக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளத்தோணி, ஐயோ கொலைப்பழி போன்ற போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விதவிதமாக உடை மாற்றி தினம் ஒரு நாடு விமானத்தில் மோடி போதையில் செல்வதாக கூறும் கள்ளத்தோணி கட்டுமரங்களே விதவிதமாக
விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்த கட்சி இலங்கைத்தமிழரை கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரசுடன் கூட்டணிக்கு காத்திருக்கும் வைகோ இலங்கை தமிழர் பற்றி இனிமேலும் பேசதகுதியில்லை என தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close