[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

“நிர்வாணப் போராட்டம் நோக்கத்தை திசை திருப்பும்” - ஸ்டாலின் அறிவுரை

dmk-leader-m-k-stalin-advised-tamil-nadu-farmers-to-protest-with-our-cultural-sense

விவசாயிகள் நிர்வாணப் போராட்டங்களை கைவிட்டு அமைதியாகவும் நாகரீகமாகவும் அறவழிப்போராட்டங்களில் ஈடுபட்டு வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

பயிர்க்கடன் தள்ளுபடி,‌ விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைக்கும் விதமாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி 20 ஆயிரம் விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதனை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் ‌என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகள் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகளும் இதே பிரச்னைகளைத்தான் சந்திக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நீண்டகால தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

மேலும், தமிழக விவசாயிகள் போராட்டம் குறித்து ஸ்டாலின் கூறுகையில், “விவசாயிகள் அமைதியாகவும், நாகரீகமாகவும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். நிர்வாணப் போராட்டங்களை கைவிட்டு அறவழியில் போராடி வேதனைக் குரலை வெளிப்படுத்த வேண்டும். நமது பண்பாட்டுக்கு எவ்விதக் குறையும் ஏற்பட்டு விடாமல் போராட்டம் நடத்த வேண்டும். 

                 

விவசாயிகளின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளின் போக்கு கண்டத்துக்குரியது. பாரம்பரிய சீர்மிகு பண்புகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடக்கும் போராட்டங்களை திமுக ஆதரிக்காது. தமிழகத்தின் மாண்பையும், மதிப்பையும் மேலும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் அறவழியில் போராட்ட வேண்டும். நிர்வாணப் போராட்ட முறைகள், போராட்டத்தின் மைய நோக்கத்தை திசை திருப்புவதாக அமைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close