[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு - கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளியா?

mdmk-leader-vaiko-met-dmk-leader-mk-stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைகோ சந்தித்தார். 

திமுக கூட்டணியில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் கூறியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாங்கள் திமுகவின் தோழமை கட்சிதான், கூட்டணி குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் என கூறிவந்தார். 

        

ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவை ஆட்சியில் அமர வைப்பேன் என்று கூறி வந்தார். அப்படி இருக்கையில் மதிமுகவும் கூட்டணியில் இல்லையென துரைமுருகன் கூறியதால் வைகோ அதிருப்தி அடைந்தார். அதனையடுத்து, திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என வைகோ தெரிவித்தார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக எதுவும் இதுவரை பேசவில்லை. இருப்பினும், ராஜீவ் காந்‌தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. 

இதனிடையே, தோழமைகளாக இயங்கிவரும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை கூட்டணியாக மாற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் கூறினார். அதோடு, திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

             

இந்நிலையில், வைகோவும், ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஏழு பேர் விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கமும் கூட என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவேன் என்றார் வைகோ.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close