[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக சார்பில் 1 கோடி கஜா புயல் நிவாரண நிதி 

admk-gives-one-crore-for-kaja-cyclone

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. அதில், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணப்பணிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிவாரண நிதியை திமுக பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

இந்நிலையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வரை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் காசோலையை வழங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close