[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

நிவாரண நிதிக்கா..? தனிப்பட்ட அரசியலுக்கா..? முதல்வர் டெல்லி பயணம் குறித்து தினகரன் கேள்வி

ttv-dhinakaran-asks-questions-about-cm-delhi-visit

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கஜா பபுயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், நிதியுதவியும் வழங்கினார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய முடியாமல் ஆய்வுப் பணிகளை பாதியிலேயே நிறுத்தினார்.  இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியை நாளை காலை சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக? என வினவியுள்ளார்.

கஜா புயலால் சேதமடைந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை, அதிகாரிகள் பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதலமைச்சர் நிவாரணம் கோர இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணம் கோராதது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close