[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

“எங்கள் பேரணியை நிறுத்த காங்கிரஸ் 25 லட்சம் பேரம்” - ஓவைசி குற்றச்சாட்டு

congress-offered-rs-25-lakh-to-cancel-telangana-rally-asaduddin-owaisi

தன்னுடைய கட்சியின் பேரணியை ரத்து செய்ய காங்கிரஸ் 25 லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்ததாக அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தை கலைத்தார். இதனால் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறவிருந்த அம்மாநில தேர்தல், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநில தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்படவுள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தாங்கள் பேரணி நடத்தக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி 25 லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்ததாக, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவராரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். இது உண்மை என்றும் காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்தால் ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

          

இதுகுறித்து ஓவைசி கூறுகையில், “ஓவைசி தன்னுடைய வாழ்க்கையை தியாக செய்வான். ஆனால், தன்னுடைய வாக்குறுதிகளை விற்க மாட்டார். யாராலும் என்னை விலைக்கு வாங்க முடியாது” என்றார். 

இந்தக் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் மீம் அஃப்சல் கூறுகையில், “அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரம் தேவையேயில்லை. ஏனெனில் அது ஒரு பொய். ஒவ்வொரு விஷயத்தை ஓவைசி பேசும் போதும், அவர் பாஜகவுக்கு ஆதரவாகவே பேசுகிறார். அப்படியிருக்கையில் அவர்களிடம் நாங்கள் ஏன் பேச வேண்டும்” என்றார்.

        

“பாஜக, தெலுங்கானா ரஷ்டிர சமிதி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி மூன்றும் ஒரே சிந்தனையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளுக்குள் மறைமுகமான கூட்டு உள்ளது. பாஜகவின் வெறுப்பு மற்றும் பிரித்தாளும் கொள்ளையை ஓவைசியும் வெளிப்படுத்துகிறார்” என்று ராகுல் காந்தியும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓவைசி ஐதராபாத் நகரில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close