[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

 “ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்?” - ஸ்டாலின் 

stalin-asks-tamilnadu-government-about-7-people-bail

ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தித் தேவையானவற்றைக் கேட்டு சாதித்துக் கொள்ளும் அதிமுக அரசு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினர் மூன்று பேரை ஆளுநரின் ஒப்புதலோடு தமிழக அரசு  இன்று வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது. ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் அதிகம் இருந்தும் அவர்களை விடுதலை தாமதிப்பது பாரபட்சமானது எனவும் அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். 

ஆயுள்தண்டனைக் கைதிகளை மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற அரசியல்சாசன உரிமை பொதிந்துள்ள 161 -வது பிரிவைச் சுட்டிக்காட்டி, மூவரையும் விடுவிக்க ஆளுநருக்கு  தமிழக அரசு பரிந்துரைத்ததாகவும் 

இதே உரிமையின் படியேதான் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில், செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியதாகவும் ஆனால், இன்றுவரை ஆளுநர் அது குறித்து முடிவெடுக்காமலும் அதற்கான காரணத்தை வெளியிடாமலும் தாமதித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

நீட்  தேர்வுக்கு விலக்குக் கேட்டு ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி விட்டு, அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் இருப்பது போல், வெள்ள நிவாரண உதவி கேட்டுக் கடிதம் அனுப்பி விட்டு, உரிய நிதியைப் பெற எந்த முயற்சியும் எடுக்காதது போல், மாநில உரிமைகளைப் பறிக்கும் நிதி ஆயோக் முடிவுகளை எதிர்க்காமல் இருப்பது போல், இதிலும் ஏனோதானோ என்றமுறையில் பட்டும்படாமல், நடந்து கொள்கிறது எடப்பாடி அரசு என தெரிவித்துள்ளார். 

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு இருந்தும் விடுதலை செய்யாமல் தாமதிப்பது இவர்களின் விடுதலையில் ஆளும் அதிமுக அரசுக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதையே காட்டுவதாகவும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அமைச்சரவையின் முடிவு எனவும் அந்த முடிவை நிறைவேற்றும் அடிப்படைப் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தித் தேவையானவற்றைக் கேட்டு சாதித்துக் கொள்ளும் அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் உடனே விடுதலை செய்ய  வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close