[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

குரூப்2 கேள்வித்தாள் தயாரித்தவருக்கு தமிழ்நாடு தெரியுமா? - ஸ்டாலின் 

in-the-group-2-exam-question-dmk-leader-stalin-said-that-his-caste-is-cruel-to-periyar

குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருப்பது கொடுமை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நேற்று நடைபெற்றது. 2 ஆயிரத்து 268 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு‌ தரப்பட்‌ட 4 விடைகளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.

காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

குரூப்-2 வினாத் தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றி எங்களுக்கு தெரியாது எனவும் நிபுணர்கள் குழுதான் வினாத்தாளை தயார் செய்து சீலிட்டு அனுப்புவதாகவும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து பெரியார் பெயருடன் சாதி இடம்பெற்றதற்கு டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்துள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருப்பது கொடுமை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் கேள்வித்தாள் தயாரித்தவருக்கும், மேற்பார்வை செய்தவர்களுக்கும் முதலில் தமிழ்நாடு - ஈரோடு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இதற்குக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்வதோடு, தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்   எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close