[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

திமுகவுடன் எதிர்க்கட்சிகள் இணைய முடியாமல் போக என்ன காரணம்; அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் திருமாவளவன் விளக்கம்

why-did-not-join-opposition-party-s-with-dmk-vck-leader-thirumavalavan-explain-at-agniparitchai

குறைந்த வாக்குவித்தியாசத்தில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தோற்றதை கவுரவமான தோல்வி என்று எடுத்துக்கொண்டேன். எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக செய்திருப்பேன். என் மீது அபரிதமான நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதையும் மீறி தோல்வி என்பது சற்று ஏமாற்றத்தை, அதிர்ச்சியை தந்திருக்கிறது.

இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும், திராவிட கட்சிகளுக்க மாற்று என்பதை முன்வைத்தீர்கள் இதை மக்கள் ஏற்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. மாற்று அரசியல் அடித்தட்டு மக்கள் வரைக்கும் சென்று சேரவில்லை என்று தான் நினைக்கிறேன். மக்கள் நலக்கூட்டணியில் கடந்த காலங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.திடீரென்று புதிய நிலைப்பாட்டை எடுத்து இந்த இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள்தான் மாற்று என்று சொல்கிறபோது அதனை உடனடியாக மக்கள் ஏற்றுகொள்ள இயலவில்லையோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. ஏனென்றால் அதற்கு உரிய நம்பகத்தன்மை, இந்த குறுகிய கால இடைவெளியில் ஏற்படவில்லை என்று தான் நினைக்கிறேன்.

மக்கள் நலக்கூட்டணி தொடங்கிய போது இருந்த முக்கியத்துவம் பின்னாளில் குறைந்து போனது. விஜயகாந்தை இணைத்த பிறகு தான் சரிந்துவிட்டது என்று கூறுவதை ஏற்க மாட்டேன். அவருக்கு என்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. வெறுமென வாக்குகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து சொல்லக்கூடாது. கொள்கையை சொல்லி ஓட்டு வாங்கிய காலம் போய், நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஓட்டு வாங்கிய காலம் போய் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலைக்கு திமுகவும், அதிமுகவும் தள்ளப்பட்டிருக்கிறது. பணம் கொடுப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை. வெறும் பணத்திற்காக மக்கள் வாக்களித்தாக கூறவில்லை. மக்களை ஊழலுக்கு உள்ளாக்கும் அரசியலில் திமுகவும் அதிமுகவும் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவின் அணியாக எங்கள் அணி செயல்பட்டது என்று சொல்வது மாதிரி ஒரு அவதூறு எதுவும் இல்லை. திமுகவைவிட அதிமுகவை அதிகம் விமர்சித்தது மக்கள் நலக்கூட்டணி. திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் இணைய முடியாமல் போனதற்கு என்ன காரணம்? திமுகவே சொல்லட்டும். திமுகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைய முடியாமல் போனதற்கு என்ன காரணம். திமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி இணைய முடியாமல் போனதற்கு யார் காரணம்? இது வந்து விடுதலை சிறுத்தைகளே திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவந்ததா? விடுதலை சிறுத்தைகளுக்கும் திமுகவிற்கு இடைவெளி ஏற்பட்டதற்கு என்ன காரணம்? இளங்கோவன் சொல்லட்டும். திமுக தரப்பு சொல்லட்டும்.. விடுதலை சிறுத்தைகள் எதனால் திமுகவைவிட்டு வெளியே சென்றது. எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது திமுக என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

எதிர்க்கட்சிகளை சிதறவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது. ஆனால் அதை திமுக செய்யவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், ஒரு முறை அதிமுக என்றால், மறு முறை திமுக. அதனால் நமக்கு தான் வாக்களிப்பார்கள் என்ற ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை. இரண்டாவது, புதிதாக சில விஷயங்களை கையில் எடுத்துள்ளார்கள். அதன் மூலமாக புதிய வாக்காளர்களை கவர்ந்து வெற்றி பெற்றுவிட முடியும் என்கிற ஒரு அதீத நம்பிக்கை. இந்த இரண்டு காரணங்களாளையும் மற்ற கட்சிகளை இணைப்பதில் அவர்களுக்கு சங்கடம் இருந்தது. பாமக வந்து அவர்களே வெளியே போனார்கள். அதற்கு திமுக வெளியேற்றியது என்று சொல்ல முடியாது. மதிமுகவிற்கும், திமுகவிற்கும் என்ன பிரச்னை என்று தெரியாது. நான் முதன் முதலாக கூட்டணி ஆட்சி கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கப்போனது, எங்களது பெரும்பான்மையான தொண்டர்கள் திமுகவிற்கு செல்வதையே விரும்புகிறார்கள் என்று ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு தொடக்த்தில் வைகோ சொன்னார். ஆனால் மு.க.தமிழரசு வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு வந்த பின்பு அவரது நிலைப்பாடு மாறுகிறது.அதற்கு என்ன காரணம், திமுகவிற்கும், மதிமுகவிற்கும் தான் தெரியும். எங்களுக்குதெரியாது. இரண்டு கம்யூனிஸ்டுகள் வெளியேறியதற்கு என்ன காரணம் என்பதை கம்யூனிஸ்டுகளை தான் கேட்க வேண்டும். நான் கூட்டணி ஆட்சி கருத்தரங்கை நடத்துவது தொடர்பான ஒரு சந்திப்பு தான் நிகழ்த்த சென்றேன். அந்த சந்திப்பில் தான் உறவு மலர்ந்து. பின் மக்கள் நலக்கூட்டணியாக மலர்ந்தது. எல்லா எதிர்க்கட்சிகளையும் சிதறவிடாமல் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் திமுகவிற்கு இருந்தது. அதனை அவர்கள் தவிர்த்தார்கள் என்பதே என் கருத்து.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close