[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைய ஈபிஎஸ்- ஓபிஎஸ் அழைப்பு

eps-and-ops-invite-to-admk

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறின. தற்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். அதேசமயம் அதிமுகவிற்கு எதிராக டிடிவி தினகரன் அணி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை டிடிவி தினகரன் தோற்றுவித்திருந்தாலும், விரைவில் அதிமுகவையும், அதன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்டே தீருவோம் என தொடர்ச்சியாக கூறிவருகிறார். ஆர்.நேகர். தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு மாற்றுப் பாதையில் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்பி வரவேண்டும் எனவும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீர் அடித்து நீர் விலகுவது இல்லை என்ற பழமொழியை குறிப்பிட்டுள்ள முதல்வர், துணை முதல்வர், கருத்து வேறுபாடுகளையும் மனமாச்சரியங்களையும் புறம்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close