[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

“அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மேல் வழக்கு” - டிடிவி தினகரன்

we-approach-supreme-court-ttv-dhinakaran

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதில் முதலமைச்சர் பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் ஓபிஎஸ் அணி முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக இருந்தது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 12 பேர் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றதையடுத்து, இந்த வாக்கெடுப்பு செல்லாது என்றும், எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடக் கோரியும் ஓபிஎஸ் அணியில் இருந்த எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவை எதிர்த்து வாக்களித்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close