[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை

rajinikanth-today-statement

வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் என அனைத்துமே தன் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்கத் தான் அரசியலுக்கு வருகிறோம் என குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், எதற்காக எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறோம் என்பது மிக மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்.

தவறான எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என சுட்டிக் காட்டியுள்ள ரஜினி, தன் குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். தான் மன்றத்தினருக்கு கொடுத்த வேலை பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலை கிடையாது என கூறியுள்ள ரஜினி, அதனால் மன்றத்திற்காக யாரும் பணம் செலவு செய்தேன் என சொன்னால் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என கூறியுள்ள ரஜினி மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்தை சாதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மன்றத்தின் கொள்ளைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களை தான் மன்றத்தில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ள ரஜினி, கொள்கைக்கு ஒத்து வராதவர்களை தம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். தம்மைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் தன்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ரஜினி, வீண் வதந்திகளில் நமது நேரத்தை வீணடிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். மன்றத்திற்காக உழைப்பவர்களின் உழைப்பு வீண் போகாது என தெரிவித்துள்ள ரஜினி, அதற்கான பலனை இறைவன் தருவான் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close