[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

காங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு

chandrababu-naidu-joining-hands-with-the-congress-was-a-democratic-compulsion

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது ஜனநாயகத்தின் கட்டாயம் என்று ஆந்திர பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் வரவிருந்தது. ஆனால், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான அரசு முன்கூட்டியே கலைக்கப்பட்டது. அதனால், தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பரில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களில் இடம்பெற்றுள்ளது. 

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் உடன் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

      

ஆந்திராவில் முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சியாக என்.டி.ஆர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 1983 இல் ஆட்சியை பிடித்தது. கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டிற்குள் ஆட்சியை பிடித்தார் என்.டி.ஆர் 1984-89 காலகட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்ந்தது. 1984 இல் நடைபெற்ற 8வது மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு 30 எம்.பிக்கள் கிடைத்தனர். அதுதான் இதுவரையில் அதிகமானது ஆகும். 1995 முதல் சந்திர சேகர் ராவ் தெலுங்கு தேசம் கட்சிக்கு தலைவராக உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 1999-2005 வரையிலும், 2014 - 2018 வரையிலும் சுமார் 10 ஆண்டுகள் இடம்பெற்று இருந்தது. ஆனால், ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் பாஜக அரசினை எதிர்த்து அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. காங்கிரஸ்க்கு எதிராக பாஜக கூட்டணியில் இடம்பெற்று வந்த தெலுங்கு தேசம் கட்சி தற்போது காங்கிரஸ் உடன் கைகோர்த்து உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலோடு, மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம் பெறும் என்றே கூறப்படுகிறது. 

    

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு எக்னாமிக்ஸ் டைம்க்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். அந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:-

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

தெலுங்கு தேசத்தைப் பொருத்தவரை, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைப்பது ஜனநாயகத்தின் கட்டாயம். தெலுங்கு பேசும் மக்களின் நலங்களுக்கு பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நம்பியே கடந்த தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைத்தோம். அவையெல்லாம் போலியாகிவிட்டது. 2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி பாஜக கவலைப்படவே இல்லை. தெலுங்கு பேசும் மக்களின் நலுக்காக இருகட்சிகளும் சேர்ந்து மக்களவையில் பணியாற்றலாம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவிடம் வலியுறுத்தினேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

தேசிய அளவில் காங்கிரஸ் உடனான கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடந்த காலங்களில் நாங்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி இருக்கிறோம். ஏனெனில் அப்பொழுது தெலுங்கு தேசம் கட்சி தேசிய, மாநில அளவில் முக்கியமான எதிர்கட்சி. மற்றபடி, வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளில் எவ்வித வித்தியாசமும் இல்லை. காங்கிரஸ் உடனான கூட்டணி தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ ஏற்படலாம்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி பற்றி?

             

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல்களால் நாட்டின் சமூக நல்லிணக்கம் பாதிப்படைந்துள்ளது. ஜனநாயகமும் அளவு கடந்து பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால், தொழில்துறையும், பொருளாதாரமும் முடங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சி சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எல்லா வகையிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முதல் ஆட்சியில் (2004-2009) நன்றாக இருந்தது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close