[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..!

now-no-by-election-for-tiruvarur-and-thiruparankundram-here-is-the-reason

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனுடன் சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்‌த நிலையில் தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மழை, தேர்தல் வழக்கை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

பருவமழை மற்றும் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இரண்டு தொகுதிகளுக்கும் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததால் திருவாரூர் தொகுதியும், அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே.போஸ் மரணமடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன.

தமிழக தலைமைச் செயலாளர் கடிதம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தின் விவரங்கள்.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில், வழக்கத்தை விட 12 சதவீதம் அளவிற்கு, வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் உள்ள திருவாரூர் கடந்த மூன்று ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மழை மற்றும் புயலால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் முடிவுக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close