[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

“தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம்” - அமைச்சர் ஜெயக்குமார்

minister-jayakumar-said-about-ttv-dhinakaran

டி.டி.வி.தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்புக் கேட்பதாகவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்து கூறினார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் இரண்டாவது முறையாகவும் தன்னை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டார் என்றும் கூறியுருந்தார். 

இதனைதொடர்ந்து டிடிவி தினகரன் பதில் கூறும் வகையில் கிரீன்வேஸ் சாலை உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதன் பேரிலே அவரை சந்தித்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும்  “ஒரு குழப்பமான மனநிலைக்கு டிடிவி தினகரன் வந்துள்ளதால் பொய்யான தகவல்களை கூறுகிறார் என்று குற்றஞ்சாட்டினார். நான் ஜெயலலிதாவிற்கு உண்மையாக இருந்ததால் தான் அடுத்தடுத்து முதலமைச்சர் பதவியை அளித்தார். தினகரன் பொய் கூறுகிறார்” என்றார்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது,  “அதிமுகவில் மீண்டும் இணையும் நிலைப்பாட்டை தினகரன் எடுக்கலாம் ஏனென்றால் தினகரனுக்கு வேறு வழியில்லை, நாம் ஒருவர் நமக்கொருவர் என்ற நிலையில்தான் அவர் உள்ளார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட மாட்டார்” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close