JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
அரசியல் 17 May, 2016 01:55 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குப்பதிவு: ராஜேஷ் லக்கானி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது கடந்த தேர்தலைவிடக் குறைவுதான் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 77. 08 ‌சதவீதம் வாக்குப்பதிவானது.

தற்போது 232 தொகுதிகளில் ‌நடைபெற்ற தேர்த‌லில் 4 கோடியே 28 லட்சத்து 73ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர். 2 கோடியே 12 லட்சத்து 44ஆயிரத்து 129 ஆண்களும், 2 கோடியே 16 லட்சத்து 28ஆயிரத்து 807 பெண்களும், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 738 பேர் வாக்களித்துள்ளனர். அதிகப்படியாக தருமபுரி மாவட்டத்தில் 85. 03 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 60. 99 சதவீத வாக்குகளும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads