[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

“தினகரன் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும்” : அமைச்சர் விஜயபாஸ்கர்

minister-vijayabaskar-talk-about-ttv-dinakaran-in-protest

தினகரனுக்கு நெஞ்சில் திராணி இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்காவில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்  கலந்து கொண்டு பேசினார். அப்போது “தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வருகிறேன். ஆனால் டிடிவி.தினகரன் காசு கொடுத்து ஆட்களை திரட்டி புதுக்கோட்டையில் கூட்டம் நடத்தி என்னை விமர்சித்து வருகிறார். 10 ஆண்டு காலமாக பதுங்குகுழியில் பதுங்கி கிடந்த தினகரன் தற்போது ஆட்சி அதிகாரத்திற்கு வர துடிக்கிறார். ஒரு போதும் மக்கள் ஆதரவோடு அவர் அதிகாரத்திற்கு வர முடியாது” என்று அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து “தினகரன் சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை என்றும் அவர் எம்பி சசிகலா புஷ்பாவிடம் தான் விசுவாசமாக இருந்தார் என்றும் கூறியுள்ளார். ஆர்கே நகர் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு சசிகலாவின் படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தினகரன் தன்னிடம் கூறியதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆர்கே நகர் தேர்தலில் தினகரனுக்காக பணியாற்றியதன் விளைவு தான் தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், தற்போது தன்னை விமர்சனம் செய்யும் தினகரனுக்கு நெஞ்சில் திராணி இருந்தால் வருகின்ற சட்டமன்ற பொதுதேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து அவர் முடிந்தால் அவர் ஜெயித்து காட்டட்டும் என்றும் விஜயபாஸ்கர் ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தர்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றும், தற்போது திமுக விற்குள் நடந்து வரும் குடும்ப சண்டைகளுக்கு தீர்வு கண்டுவிட்டு நாட்டிற்காக பாடுபட வரட்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close