[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் நலக்குறைவு: பதவி விலகுகிறார் மனோகர் பாரிக்கர்

manohar-parrikar-resigns-the-post-of-goa-chief-minister

உடல்நலக்குறைவு காரணமாக கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர், பதவியில் இருந்து விலக விரும்புவதாக பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். கோவா முதலமைச்சராக உள்ளார். இவருக்கு வயது 62. கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  கணைய அழற்சிக் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். தற்போது மும்பை, கோவா ஆகிய இடங்களில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், முதலமைச்சர் பதவியில் தான் தொடர்வது சரியாக இருக்காது என அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இப்போதைக்கு பதவியில் தொடரும்படி மனோகர் பாரிக்கருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய இடத்துக்கு யாரை நியமிக்கலாம் என முடிவு செய்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் பாஜக தலைமை ஈடுபடும் என அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் சொல்கிறார்கள். 

மனோகர் பாரிக்கர், முன்பு நரேந்திர மோடி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து மீண்டும் கோவாவுக்கு முதல்வராக சென்றார். இப்போது உடல் நலக்குறைவு காரணமாக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close