[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டத்தில் மோதல் : 7 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்

7-congress-party-members-sacked-after-choas-in-its-sathyamoorti-bhavan-meeting

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், சென்னை வந்துள்ளார். அவரது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், அனைத்துப் பிரிவு தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எதிர்வரும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், வெற்றிபெறும் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்குமாறு 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நுழைவு வாயிலில் இருந்தவர்களிடம் கேட்டனர். அழைப்பு உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என திட்டவட்டமாக கூறப்பட்டதால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

தகவலறிந்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இரு பிரிவினரையும் சமாதானம் செய்து வைத்தார். புதிய மேலிடப் பொறுப்பாளரான சஞ்சய்தத், அலுவலகத்தில் இருந்தபோதே நடைபெற்ற இச்சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “அழைப்பில்லாமல் வந்தவர்கள் தான் வெளியேற்றப்பட்டனர். எந்த பிரச்னையும் இல்லை” என்றார். 

அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கூறுகையில், “கோஷ்டி மோதல் ஏதுமில்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் கட்சியினர் ஒன்றாக பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கட்சியினர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கை குலுக்கி கொண்டனர்” என்றார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 7 பேரை கட்சியில் இருந்து அதன் தலைவர் திருநாவுக்கரசர் நீக்கியுள்ளார். முரளிதரன், சீனிவாசமூர்த்தி
, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப்,  பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர் உள்ளிட்டோர்  நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close