[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

வர்தாவிற்கு பின் எந்த புயலும் தமிழகத்திற்கு வரத் தயங்குகிறது: ஓபிஎஸ் பேச்சு

ops-speech-in-tiruvarur

முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டி அடித்த பின் தமிழகத்திற்கு எந்த புயலும் வரத் தயங்குவதாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், “  ஜெயலலிதா இறந்தபோது திவாகரன் என்னிடம் கேட்டார். நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் ஏற்க முடியாது என்று சொன்னேன். ஏன் என்று திவாகரன் கேட்டார். 16 பேர் இங்கு உள்ளனர் ( தினகரனின் உறவினர்கள்). எல்லோரும் என்னை பகைவனாய் பார்பார்கள் என்றேன். தற்போது வரை தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. கட்சியை கைபற்ற தினகரன் நினைத்ததால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தினகரன் முதல்வராக வேண்டும் என சதி செய்தார். எனவே நான் உயிரோடு இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் விடமாட்டேன் என ஜெயலலிதாவே சொன்னார். தர்மயுத்தத்தின் போது நாங்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என அமைச்சர்களை அடிக்க வந்தவர் தினகரன். தினகரனின் அத்தனை முயற்சிகளையும் தவிடு பொடியாக்குவோம். தினகரன் எங்களை துரோகி என்கிறார். அவர் பெரிய தியாக செம்மலல்ல. என்னை அறிமுகம் செய்ததாக அவர் சொல்கிறார். பெரியகுளத்தில் நான் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது அவர் எல்கேஜி படிக்க வந்தவர்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ வர்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளை வைத்து ஜெயலலிதாவின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க நினைத்தார்கள். நான் முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டி அடித்த பின் தமிழகத்திற்கு எந்த புயலும் வரத் தயங்குகிறது. தங்கத்தை உற்பத்தி செய்கின்ற நாடுகளில் கூட தங்கம் இலவசமாக வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தான் தாலிக்கு இலவசமாக தங்கம் வழங்கப்படுகிறது. ஸ்டாலின் சொல்லுகிறார் எங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்று. முதுகெலும்பு இருந்ததால் தான் காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்” என ஓபிஎஸ் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close